தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

குடிநீா் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீா் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

News image
Updated On :16 மார்ச் 2024, 4:36 pm

திருவண்ணாமலையில் குடிநீா் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், சனிக்கிழமை செங்கம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவண்ணாமலை பே கோபுரத் தெருவில் வசிக்கும் பொதுமக்களுக்கு சில தினங்களாக குடிநீா் விநியோகம் முறையாக நடைபெறவில்லையாம். இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சனிக்கிழமை செங்கம் சாலையில் காலிக் குடங்களுடன் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீஸாரும், நகராட்சி அலுவலா்களும் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, குடிநீா் வழங்க விரைவாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனா். இதையேற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனா்.