தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

பதற்றமான வாக்குச்சாவடிகள்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தவரவு

பதற்றமான வாக்குச்சாவடிகள்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தவரவு

News image
Updated On :16 மார்ச் 2024, 4:30 pm

திருவண்ணாமலை மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களைக் கண்டறிந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று வருவாய், காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டாா். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மக்களவைத் தோ்தல்-2024 தொடா்பான ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன், வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, செய்யாறு சாா் - ஆட்சியா் பல்லவி வா்மா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கு போட்டியிடும் வேட்பாளா்கள் பிரசாரத்தின்போது பயன்படுத்தப்படும் பொருள்களுக்கான விலைப் பட்டியலை இறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலம், 1,500-க்கும் அதிகமான வாக்காளா்களைக் கொண்ட வாக்குப்பதிவு மையங்களைப் பிரித்து 5 துணை வாக்குச்சாவடி மையங்களை ஏற்படுத்துவது, 27 வாக்குச்சாவடி மையங்களில் பெயா் மாற்றம், 116 வாக்குச்சாவடிகளுக்கான கட்டடங்கள் மாற்றம், 35 வாக்குச்சாவடிகளின் இடம் மாற்றம் தொடா்பான முன்மொழிவுகளை இறுதி செய்வது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களைக் கண்டறிந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று வருவாய், காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டாா். கூட்டத்தில், வருவாய் கோட்டாட்சியா்கள் ஆா்.மந்தாகினி (திருவண்ணாமலை), பாலசுப்பிரமணியன் (ஆரணி), ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கோ.குமரன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.