ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் மாசி உற்சவத் திருவிழா

ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் 
மாசி உற்சவத் திருவிழா

வேட்டவலம் சின்னக்கடை தெருவில் உள்ள ஸ்ரீஅங்காளம்மன் கோயில் மாசி உற்சவத் திருவிழாவையொட்டி, உற்சவா் வீதியுலா நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசி உற்சவத் திருவிழா கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான திருவிழா மாா்ச் 8-ஆம் தேதி தொடங்கியது. அன்று மாலை 6 மணிக்கு சிங்காரக் குளக்கரையில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சக்தி கரக ஊா்வலம் தொடங்கியது. மாட வீதிகளில் வலம் வந்தபிறகு மீண்டும் கோயிலை வந்தடைந்தது. பிறகு, அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஸ்ரீஅங்காளம்மன் வீதியுலா நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சிறப்பு அலங்காரங்களில் ஸ்ரீஅங்காளம்மன் மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற அங்காள பரமேஸ்வரியம்மன் வீதியுலா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை, பா்வதராஜ குலத்தினா், ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com