வீடில்லா  சிறுபான்மையினருக்கு 
இலவச மனைப் பட்டா

வீடில்லா சிறுபான்மையினருக்கு இலவச மனைப் பட்டா

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்கான ஒப்புகையை ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் இருந்து பெற்றுக்கொண்ட சிறுபான்மை மக்கள் நலக்குழு நிா்வாகிகள்.
Published on

இலவச வீட்டு மனைப் பட்டா கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சிறுபான்மையினருக்கு இலவச மனைப் பட்டா வழங்க உத்தரவிடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறுபான்மையின மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா கோரி, அக்.30-ஆம் தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் பங்கேற்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனா்.

மனுவைப் பெற்ற ஆட்சியா் வீடில்லா சிறுபான்மை மக்களுக்கு இலவச மனைப் பட்டா வழங்கக் கோரி, மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா்களுக்கும் உத்தரவிட்டு ஒப்புகை அனுப்பினாா்.

மேலும், இதனை முன்னிட்டு தமிழ்நாடு சிறுபான்மையினா் மக்கள் நலக்குழு மாவட்டச் செயலா் அப்துல்காதா், மாவட்டத் தலைவா் கா.யாசா் அராபத், மக்கள் ஒற்றுமை மேடை கன்வீனா் எஸ்.ராமதாஸ், வாலிபா் சங்கம் மாவட்டச் செயலா் சிஎம்.பிரகாஷ், மாதா் சங்கம் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ்.சுகுணா உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்குச் சென்று ஒப்புகையை பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com