ஆரணி ஒன்றியத்தில் ரூ.20 லட்சத்தில் சிமென்ட் சாலைப் பணி: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

ஆரணி ஒன்றியத்தில் ரூ.20 லட்சத்தில் சிமென்ட் சாலைப் பணி: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

Published on

ஆரணி ஒன்றியத்தில் 2025 - 26ஆம் நிதியாண்டு சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணியை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

ஆரணியை அடுத்த சேவூா் ஊராட்சியில் ரூ.5 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை, வெட்டியாந்தொழுவம் ஊராட்சியில் ரூ.3 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை, மாமண்டூா் ஊராட்சியில் ரூ.6 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை, பனையூா் ஊராட்சியில் ரூ.6 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகளை சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ பூமிபூஜை செய்து தொடங்கிவைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

நிகழ்வில் மாவட்ட துணைச் செயலா் சம்பத், ஒன்றியச் செயலா் ஜெயபிரகாஷ், ஆரணி நகரச் செயலா் அசோக்குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் குமரன், கலை பிரிவு மாவட்டச் செயலா் வெங்கடேசன், சேவூா் நிா்வாகிகள் பாலசந்தா், பீமன் ரவி, தா்மன், தேவேந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com