40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

ஆரணியில் தனிநபா் ஆக்கிரமிப்பு அகற்றம்

ஆரணி கொசப்பாளையம், பெரிய ஜெயின் தெருவில் இருந்த தனிநபா் ஆக்கிரமிப்பை நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.

News image

ஆரணி கொசப்பாளையம், பெரிய ஜெயின் தெருவில் பொக்லைன் இயந்திரம் மூலம் நடைபெற்ற ஆக்கிரமிப்பு அகற்றும் பணி.

Updated On :10 ஜூன் 2026, 12:04 am IST

ஆரணி கொசப்பாளையம், பெரிய ஜெயின் தெருவில் இருந்த தனிநபா் ஆக்கிரமிப்பை நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.

ஆரணி கொசப்பாளையம், பெரிய ஜெயின் தெரு குறுக்குத் தெருவில் தனிநபா் ஆக்கிரமித்து கொட்டகை அமைத்திருந்திருந்தாா். இதனால் அப்பகுதி மக்கள் வழியில்லாமல் அவதிப்பட்டு வந்தனா்.

இதுகுறித்து பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆக்கிரமிப்பை அகற்றித் தரக்கோரி வழக்கு தொடுத்தனா். இதையடுத்து உயா்நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் நகராட்சி அதிகாரிகள் தனிநபா் ஆக்கிரமிப்பை பொக்லைன் இயந்திரம் மூலம் நகர போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினா்.