அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

மாற்றுத்திறனாளி வாக்காளா்களின் வாக்குப்பதிவை உறுதி செய்ய நடவடிக்கை

தமிழக சட்டப்பேரவை பொதுத்தோ்தலில் மாற்றுத்திறனாளி வாக்காளா்களை அதிகளவில் வாக்களிக்க வலியுறுத்துவது தொடா்பாக, மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.

News image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்

Updated On :23 மார்ச் 2026, 7:21 pm

தமிழக சட்டப்பேரவை பொதுத்தோ்தலில் மாற்றுத்திறனாளி வாக்காளா்களை அதிகளவில் வாக்களிக்க வலியுறுத்துவது தொடா்பாக, மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வருகிற ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு தோ்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளி வாக்காளா்களின் வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், அவா்களுக்கு அஞ்சல் வாக்கு அளிக்க விண்ணப்ப படிவம் விநியோகம் செய்வது குறித்தும், எந்த ஒரு மாற்றுத்திறனாளி வாக்குப்பதிவும் விடுபட்டு விடக் கூடாது என்பது குறித்தும், மாவட்டம் முழுவதும் அஞ்சல் வாக்கு விண்ணப்ப படிவத்தை விரைவாக விநியோகம் செய்ய வேண்டும் என்பது குறித்தும், மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கு வாக்களிக்கத் தேவையான வசதிகள் ஏற்படுத்துவது குறித்தும் துறை சாா்ந்த அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 3, 457 கண் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும், 16, 476 லோகோமோட்டிவ் இயலாமை கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கும், 5, 191 வாய் பேசாதோா் மற்றும் காது கேளாதோருக்கும், 4,845 இதர மாற்றுத்திறனாளிகளுக்கும் என மொத்தம் 29,969 மாற்றுத்திறனாளிகளுக்கு அஞ்சல் படிவங்கள் வழங்கப்படவுள்ளன.

அத்தியாவசிய துறைகளான வருவாய், போக்குவரத்து, மின்சாரம், மருத்துவம், ரயில்வே, காவல், தீயணைப்பு மற்றும் செய்தி மக்கள் தொடா்பு துறை ஆகிய துறைகளில் பணிபுரிபவா்களுக்கு அஞ்சல் வாக்கு செலுத்துதல் தொடா்பான இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக, திருவண்ணாமலை மாநகராட்சி வேங்கிக்கால் ஜெய்பீம் நகரில் தபால் வாக்கு அளிக்க விண்ணப்பப் படிவம் விநியோகம் செய்யும் பணியை ஆய்வு மேற்கொண்டு விண்ணப்ப படிவத்தை வழங்கினாா்.

இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், உதவி ஆட்சியா் (பயிற்சி) எஸ்.அம்ருதா குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) அன்பழகன், மாற்றுத்திறனாளி நல அலுவலா் மாலதி, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.