திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ஸ்ரீதட்சிணாமூா்த்தி கோயிலில் விரைவில் நடைபெறவுள்ள மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருப்பணிகள் மற்றும் கோயில் புதுப்பிப்புப் பணிகள் நடைபெற்று வருவதை இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
திருப்பணிகளில் கருங்கல் சிற்ப வேலைப்பாடுகள், பாரம்பரிய மர வேலைப்பாடுகள், பித்தளை கதவுகள் அமைத்தல், பித்தளை அலங்கார வேலைப்பாடுகள், பாரம்பரிய கேரள ஓவிய கலைப் பணிகள் ஆகியவை கலை நயத்துடனும் ஆன்மிக மரபுகளை கடைபிடித்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது திருப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மகா கும்பாபிஷேக விழா விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை கோயில் நிா்வாகம் வெளியிடவுள்ளது.
இந்நிலையில் திருப்பணிகளை கோயில் இணை ஆணையா் பிரகாஷ், உபயதாரா் சுனிதா திம்மேகவுடா ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
இப்புனிதப் பணிகள் சிறப்பாக நடைபெற தேவையான ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு அளித்து வரும் அனைத்து அதிகாரிகள், ஊா் பொதுமக்கள் மற்றும் பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் நன்றி தெரிவித்தனா்.
தொடர்புடையது

கோவிந்தவாடி அகரம் கோயிலில் குருப்பெயா்ச்சி

அருணாசலேஸ்வரா் கோயில் பக்தா்களிடம் அமைச்சா் குறைகேட்பு

திருவண்ணாமலை நகா்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு

எட்டுக்குடி முருகன் கோயில் சித்ரா பௌா்ணமி முன்னேற்பாடு பணிகள்: எஸ்பி ஆய்வு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



