சுடச்சுட

  

  நெமிலி வட்டத்தில் இரு ஊராட்சிகளை இணைக்கக் கோரி வட்டாட்சியரிடம் மனு

  By DIN  |   Published on : 20th January 2017 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நெமிலி வட்டத்தில் சயனபுரம் மற்றும் கீழ்வெங்கடாபுரம் ஆகிய இரு ஊராட்சிகளை இணைக்கக் கோரி  நெமிலி வட்டாட்சியரிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
  நெமிலி ஒன்றிய திமுக செயலாளர் வடிவேல் உள்ளிட்டோர் அளித்த மனுவில் கூறியிருப்ப
  தாவது:
  வேலூர் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் வட்டம், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, நெமிலி வட்டம் உருவாக்கப்பட்டது. அப்போது, நெமிலிக்கு மிக அருகில் உள்ள கிராமங்களும் அரக்கோணம் வட்டத்தில் இருக்கும் நிலை உருவானது. இதைத் தொடர்ந்து, தங்களது ஊராட்சிகளை நெமிலி வட்டத்தோடு இணைக்கக் கோரி அசநெல்லிகுப்பம், சயனபுரம், கீழ்வெங்கடாபுரம், நெல்வாய், ஜாகீர்தண்டலம் உள்ளிட்ட பத்து ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
  இந்த நிலையில், ராணிப்பேட்டை கோட்ட வருவாய் அலுவலர் முருகேசன் தலைமையில் இரு வட்டங்களின் ஆட்சி எல்லை அதிகார வரம்பை நிர்ணயிக்கும் ஆய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அப்போது அலுவலர்கள், இரு வட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தனர்.
  இந்த நிலையில், அரக்கோணம் வட்டத்தில் உள்ள அசநெல்லிகுப்பம், திருமால்பூர், கீழ்வெண்பாக்கம், ஜாகீர்தண்டலம், நெல்வாய் ஆகிய 5 ஊராட்சிகளையும் நெமிலி வட்டத்தோடு இணைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், நெமிலி வட்டத்தில் உள்ள தாளிக்கால், கரிக்கல், மேல்பாக்கம் ஆகிய ஊராட்சிகளை அரக்கோணம் வட்டதோடு இணைக்கவும் அதிகாரிகள் முடிவு செய்தனர்.
  இந்த நிலையில், அரக்கோணம் வட்டத்தில் உள்ள சயனபுரம், கீழ்வெங்கடாபுரம் ஆகிய இரு ஊராட்சிகளையும் இணைக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
  திமுக இளைஞரணி மாவட்டத் துணை அமைப்பாளர் எஸ்.ஜி.சி.பெருமாள், சயனபுரம் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் அப்துல்ரகுமான், நெமிலி ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவர் சுப்பிரமணியம், பாமக பிரமுகர்கள் திருமால், பிரபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai