முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

சிறுமிக்கு திருமணம்: அதிகாரிகள் வருவதை அறிந்து கல்யாண வீட்டார் தப்பியோட்டம்

வாணியம்பாடி அருகே பிளஸ் 2 மாணவிக்கு நடக்கவிருந்த திருமணத்தைத் தடுத்து நிறுத்த அதிகாரிகள் வருவதை

Published On :

வாணியம்பாடி அருகே பிளஸ் 2 மாணவிக்கு நடக்கவிருந்த திருமணத்தைத் தடுத்து நிறுத்த அதிகாரிகள் வருவதை அறிந்து, திருமணத்தை நிறுத்திவிட்டு மணமக்கள் வீட்டார் தப்பியோடினர்.
வாணியம்பாடியை அடுத்த மதனஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த 16 வயதே ஆன பிளஸ் 2 மாணவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுதாகாருக்கும் (24) திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் முடிவு செய்தனர். மதனாஞ்சேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் புதன்கிழமை காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்தனர். 
இந்நிலையில், 18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கு திருமணம் நடத்தி வைக்க ஏற்பாடுகள் நடைபெறுவதாக ஆட்சியர் மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு செவ்வாய்க்கிழமை இரவு தகவல் கிடைத்தது.
இதையடுத்து புதன்கிழமை அதிகாலை சமூகப் பாதுகாப்பு நலத் துறை அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள், வாணியம்பாடி கிராமியக் காவல் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் போலீஸார் திருமண மண்டபத்துக்குச் சென்றனர். 
அப்போது, மண்டபத்தில் ஒருவர் கூட இல்லை. தோரணங்கள் கட்டப்பட்டு மணவறை தயார் நிலையில் இருந்தது. திருமணத்தைத் தடுத்து நிறுத்த அதிகாரிகள் வருவதை அறிந்து, திருமணத்தை நிறுத்திவிட்டு மணமக்கள், இரு வீட்டாரும் ஒட்டு மொத்தமாக தப்பியோடியது தெரியவந்தது. 
இதுதொடர்பாக, மணமக்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.