முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

நெல் கொள்முதல் நிலையங்களில் குறைபாடு புகார்களை வாட்ஸ்ஆப்பிலும் தெரிவிக்கலாம்!

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குறைபாடுகள் குறித்த புகார்களை வாட்ஸ்ஆப் எண்ணில் தெரிவிப்பது தொடர்பாக...

paddy procurement centers can also be reported via WhatsApp No

நெல் கொள்முதல் நிலையங்களில் குறைபாடு புகார்களை வாட்ஸ்ஆப்பிலும் தெரிவிக்கலாம் - கோப்புப்படம்

Published On :

சென்னை: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குறைபாடுகள் குறித்த புகார்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் "உழவர் உதவி மைய வாட்ஸ்ஆப் எண்ணில்" புகார் அளிக்கலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,

நடப்பு கொள்முதல் பருவம் 2026–2027-க்கு மத்திய அரசால் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டதன் அடிப்படையில், தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு முதல்வர் விஜய் சட்டமன்ற பேரவை விதி 110–ன் கீழ் நெல்லுக்கான ஊக்கத் தொகையாக சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.156-லிருந்து ரூ.289-ஆகவும், பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.131-லிருந்து ரூ.159- ஆகவும் உயர்த்தி வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி நடப்பு கொள்முதல் பருவம் 2026-2027-ல் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் செப்.1 முதல் கொள்முதல் பருவம் தொடங்கப்பட்டு செப்.3 முதல் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதல் திட்டத்தினை வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புணர்வுடனும் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து செயல்படுத்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய அரசாணை செப்.15 இல் தேதி தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

நடப்பு கொள்முதல் பருவம் 2026-2027-ல் சன்னரகம் நெல் குவின்டால் ஒன்றுக்கு ரூ.2750- க்கும் பொதுரகம் நெல் குவின்டால் ஒன்றுக்கு ரூ.2600-க்கும் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் செப்.3 முதல் 20,196 விவசாயிகளிடமிருந்து 1.17 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், விவசாயிகள் எவ்வித சிரமங்களின்றி தங்களது நெல்லினை விற்பனை செய்திடவும் அவ்வாறு விற்பனை செய்திடும் போது கொள்முதல் நிலையங்களில் உள்ள குறைபாடுகள் பற்றியோ அல்லது பணம் வசூலிப்பதைப் பற்றியோ புகார் தெரிவிக்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் "உழவர் உதவி மைய வாட்ஸ்ஆப் எண். 9500801465-ல்" புகார் அளிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Complaints regarding deficiencies at paddy procurement centers can also be reported via WhatsApp No.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.