
கே.வி.குப்பம் அருகே கூட்டுறவு வங்கியில் ரூ. 77 லட்சம் கையாடல் செய்ததாக வங்கியின் முன்னாள் மேலாளர் உள்பட 4 பேரை வேலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
கே.வி.குப்பம் அருகே பெருமாள்குப்பம் பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கூட்டுறவு துணைப் பதிவாளர் பாஸ்கரன் மேற்கொண்ட கணக்குத் தணிக்கையில் கடந்த 2013 முதல் 2017-ஆம் ஆண்டு வரை வங்கியில் முதலீடான தொகையில் சுமார் ரூ. 1 கோடி அளவுக்கு தொகை கணக்கில் வராமல் இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக, பாஸ்கரன் வேலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், அந்த வங்கியின் முன்னாள் மேலாளரான காட்பாடி வட்டம், முருகம்பட்டு பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் (65), செயலரான குடியாத்தம், சேத்துவண்டையைச் சேர்ந்த நேதாஜி (50), உதவியாளர் அலங்காநேரியைச் சேர்ந்த சிதம்பரம் (40), காவலாளியான பெருமாள்குப்பத்தைச் சேர்ந்த உலகநாதன் (55) ஆகியோருக்கு இந்த கையாடலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அதேசமயம், விசாரணையின்போதே சுமார் ரூ. 20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், ரூ. 77 லட்சம் திருப்பிச் செலுத்தப்படாததை அடுத்து அவர்கள் 4 பேரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.
இதில், செயலர் நேதாஜி, உதவியாளர் சிதம்பரம், காவலாளி உலகநாதன் ஆகியோர் ஏற்கெனவே பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தொட ர்ந்து அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






