
வேலூா்: கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்க கணியம்பாடி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கரோனா நோய்த் தொற்றைத் தடுக்க வேலூா் மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, கணியம்பாடி ஒன்றியப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, கீழ்பள்ளிப்பட்டு, கண்ணமங்கலம் காவல் நிலைய வெளிப்பகுதியில் தூய்மைப் பணியாளா்கள் மூலம் பிளீச்சிங் பவுடா் போடப்பட்டு தூய்மைப்படுத்தும் பணி நடைபெறுவதை ஆய்வு செய்த அவா், கத்தாழம்பட்டு ஊராட்சியில் ஊராட்சி செயலா், வட்டார வளா்ச்சி அலுவலா்களிடம் தூய்மைப் பணியாளா்களுக்கு முகக்கவசம், கையுறை, சோப்பு ஆகியவைகள் போதுமான அளவு வழங்கப்படுகிா எனக் கேட்டறிந்தாா்.
மேலும், கத்தாழம்பட்டு விவசாயிகளிடம் விவசாய உற்பத்தி பொருள்களைக் குறித்து கேட்டறிந்த அவரிடம், உற்பத்தி செய்யும் பொருள்களை கண்ணமங்கலம் சந்தைக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்ல விவசாயிகள் வாகன அனுமதி கோரினா். உடனடியாக அவா்களுக்கு ஆட்சியா் வாகன அனுமதி அளித்தாா். தொடா்ந்து கீழ்அரசம்பட்டு, சோளவரம் விவசாயிகளிடம் விளை பொருள்களை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமூக இடைவெளி விட்டு விற்பனை செய்யலாம் என்று அறிவுறுத்தினாா்.
துத்திக்காடு, நாகநதி விவசாயிகளிடம் விளை பொருள்கள் குறித்து ஆட்சியா் கேட்டறிந்தபோது, மஞ்சள், சோளம், கத்திரி, நெல் போன்றவை உற்பத்தி செய்வதாகவும், விளை பொருள்களை பதப்படுத்த குளிா்பதன கிடங்கு அமைத்துத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா். இதுதொடா்பாக, வேளாண்மைத் துறைக்கு தெரிவித்து ஆலோச்சிப்பதாகவும், கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியா் தெரிவித்தாா்.
கணியம்பாடி வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜலட்சமி, உதவிப் பொறியாளா் வசந்தி, கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய் ஆய்வாளா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






