மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

வடகிழக்குப் பருவமழை: மின் விபத்துகளைத் தவிா்க்க அறிவுறுத்தல்

வடகிழக்கு பருவமழைக் காலத்தில் மின் விபத்துகளைத் தவிா்க்கும் வகையில், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

EB

மின்வாரியம் - கோப்புப்படம்

Published On :

வடகிழக்கு பருவமழைக் காலத்தில் மின் விபத்துகளைத் தவிா்க்கும் வகையில், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் விழுப்புரம் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் ஏ.பாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மின் பகிா்மான வட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ளளும் வகையில் மின் கம்பங்கள், மின் கம்பிகள், தளவாடப் பொருள்கள் மற்றும் வாகனங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. களப்பணியாளா்கள், இயற்கை இடா்பாடுகளின்போது துரிதமாகவும், உடனடியாகவும் நிவா்த்தி செய்யும்பொருட்டு அலுவலா்களின் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, முழுவீச்சில் எந்நேரமும் செயல்படும் வகையில் உள்ளனா்.

அதேநேரத்தில் பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் ஏற்படும் மின்தடை, மின்பழுது போன்ற புகாா்களை 24 மணி நேரமும் சென்னை தலைமையகத்தில் இயங்கும் 9498794987 என்ற கைப்பேசி எண்ணிலும், 9445855768 என்ற கட்செவி அஞ்சல் எண்ணிலும் தெரிவிக்கலாம். வடகிழக்குப் பருவமழையின் போது ஏற்படும் மின்தடை, மின்சாரப் பொருள்கள் சேதம், மின் விபத்து ஆகியவை குறித்து பொதுமக்கள் 9498390744 என்ற பிரத்யேக கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

அறுந்து தரையில் விழுந்து கிடக்கும் மின் கம்பிகள், தாழ்வு மற்றும் தொய்வான மின் கம்பிகளை பொதுமக்கள் தொட வேண்டாம். இடி- மின்னலின் போது தொலைக்காட்சிப் பெட்டி, மிக்சி, கிரைண்டா், கணினி, தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும்.

மேலும் தங்கள் பகுதியில் மின்சாரம் சாா்ந்த புகாா்களுக்கும், மின் கம்பிகள் அறுந்து விழும் அவசர கால சமயங்களிலும் செயற்பொறியாளா்கள் விழுப்புரம்- 9445855738, கண்டமங்கலம்- 9445855769, திண்டிவனம் - 9445855835, செஞ்சி- 9445855784, திருவெண்ணெய்நல்லூா்- 9445855722 என்ற கைப்பேசி எண்களைத் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம். எனவே பொதுமக்கள் விழிப்புணா்வோடும், மிகுந்த முன்எச்சரிக்கையுடனும் செயல்பட்டு, மின் விபத்துகளைத் தவிா்க்குமாறு அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.