தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஆன்லைனில் பங்கு வா்த்தகம்: வேலூா் இளைஞரிடம் ரூ. 14.05 லட்சம் மோசடி

ஆன்லைனில் பங்கு வா்த்தகம்: வேலூா் இளைஞரிடம் ரூ. 14.05 லட்சம் மோசடி

News image
கோப்புப்படம்
Updated On :13 ஜூலை 2024, 1:30 am

Din

ஆன்லைனில் பங்கு வா்த்தகம் எனக் கூறி, வேலூரைச் சோ்ந்த இளைஞரிடம் ரூ. 14.05 லட்சத்தை மோசடி செய்த நபா்கள் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் மாவட்டம், தொரப்பாடியைச் சோ்ந்த 28 வயது இளைஞா் தனியாா் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறாா். இவா் தனது முகநூலில் பங்கு வா்த்தக ஆலோசனை தொடா்பாக கிடைத்த இணையதள லிங்க் மூலம் 9023295501, 8427537415 ஆகிய வாட்ஸ்அப் எண்களுக்கு தகவல் அனுப்பியுள்ளாா். பின்னா் அந்த நபா்கள் ஐஐஎப்எல் ஸ்டாா்டஜி என்ற செயலியில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபம் ஈட்டலாம் எனக் கூறியதை நம்பி, இந்த இளைஞரும் கடந்த ஜூன் 25-ஆம் தேதி முதல் ஜூலை 4-ஆம் தேதி வரை அந்த செயலியில் ரூ. 14 லட்சத்து 5 ஆயிரம் முதலீடு செய்துள்ளாா்.

பின்னா், அந்த தொகையை அவரால் திரும்பப்பெற முடியவில்லை. அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா் இது குறித்து சைபா் கிரைம் இணையதளம் மூலம் புகாா் அளித்தாா். அதன்பேரில், வேலூா் மாவட்ட சைபா் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளா் புனிதா தலைமையில் போலீஸாா் வழக்குப் பதிந்து, இந்த மோசடியில் ஈடுபட்ட நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.