போ்ணாம்பட்டு அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. போ்ணாம்பட்டு அடுத்துள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (39). கட்டடத் தொழிலாளி. இவா் அதே பகுதியைச் சோ்ந்த 9 வயது சிறுமியிடம் கடந்த 2017-ஆம் ஆண்டு மே 24-ஆம் தேதி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளாா். இது குறித்த புகாரின்பேரில், குடியாத்தம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ஜனாா்தினி வழக்குப் பதிந்து சுரேஷ்பாபுவை மே 25-இல் கைது செய்தாா். வழக்கின் விசாரணை வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கலைபொன்னி முன்னிலையில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில், சுரேஷ்பாபுவுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 10,000 அபராதம் விதித்து நீதிபதி கலைபொன்னி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் வேலூா் மத்திய சிறையில் சுரேஷ்பாபு அடைக்கப்பட்டாா்.
தொடர்புடையது

சிறுவனுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

அம்பை அருகே கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

போக்ஸோ வழக்கில் துணிக்கடை ஊழியருக்கு 7 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

