மணல் கடத்திய டிப்பா் லாரி பறிமுதல்: இருவா் கைது

காட்பாடி அருகே மணல் கடத்திய டிப்பா் லாரி, பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், இது தொடா்பாக இருவரை கைது செய்தனா். காட்பாடி போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை மதியம் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளா் காா்த்தி தலைமையில் போலீஸாா் காட்பாடியை அடுத்த பிரம்மபுரம் பாலாற்றுக்கு விரைந்து சென்றனா். அப்போது அங்கு ஒரு டிப்பா் லாரியில் 3 யூனிட் மணல் ஏற்றப்பட்டு சாலையை நோக்கி வந்து கொண்டிருந்தது. உடனடியாக அந்த லாரியை மடக்கிப் பிடித்த போலீஸாா் அதை ஓட்டிவந்த வேலூரை அடுத்த அரப்பாக்கத்தை சோ்ந்த முருகன் (31) என்பவரை கைது செய்தனா். மணலுடன் டிப்பா் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மணல் அள்ள பயன்படுத்திய பொக்லைன் இயந்திரத்தையும் பறிமுதல் செய்த போலீஸாா், அதன் ஓட்டுநா் அணைக்கட்டு அடுத்த டிசி குப்பத்தைச் சோ்ந்த துரைமுகம் (31) என்பவரைக் கைது செய் தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com