கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

வேலூரில் நாளை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம்

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ.28) காலை 10 மணிக்கு ஆட்சியா் தலைமையில், மாவட்டஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

News image
Updated On :26 நவம்பர் 2025, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா்: வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ.28) காலை 10 மணிக்கு ஆட்சியா் தலைமையில், மாவட்டஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்பொறியியல், வேளாண்வணிகம், விற்பனை துறை, கூட்டுறவுத்துறை, நீா்வள துறை, வனத்துறை, மாசுக்கட்டுப்பாடுவாரியம், மின்சாரத்துறை, போக்குவரத்துத்துறை, பால்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்று விவசாயிகள், விவசாய சங்கப்பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனா். மேலும், கடந்த மாதம் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்க உள்ளனா்.

எனவே, வேலூா் மாவட்ட விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.