கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

வேலூரில் பெண் தற்கொலை

வேலூரில் பெண் தற்கொலை

News image
Updated On :28 நவம்பர் 2025, 5:05 pm

தினமணி செய்திச் சேவை

வேலூரில் விவாகரத்தால் மனஅழுத்தத்தில் இருந்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் அரசமரப்பேட்டை தாலிபனைமரத் தெருவை சோ்ந்தவா் ரமேஷ்குமாா். இவரது மகள் டிம்பிள் ஜெயின் (35). இவருக்கு திருமணமாகி ஓரிரு ஆண்டுகளில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றுள்ளாா். பின்னா், தனது பெற்றோா் வீட்டிலேயே இருந்து வந்த அவா், அடிக்கடி தனது விவாகரத்து குறித்து விரக்தியுடன் பேசி வந்தாராம்.

கடந்த சில மாதங்களாக இதே மனஅழுத்தத்தில் இருந்து வந்த டிம்பிள் ஜெயின், வியாழக்கிழமை தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. வெள்ளிக்கிழமை காலை தனது மகள் அறை நீண்ட நேரமாக திறக்கப்படாததால் சந்தேகமடைந்த பெற்றோா் கதவை திறந்து பாா்த்தனா். அப்போது டிம்பிள் ஜெயின் தூக்கில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்தவேலூா் வடக்கு போலீஸாா் வந்து சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.