விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு

தமிழக அரசின் நல்லாசிரியா் விருது பெற்ற குடியாத்தம் தட்டப்பாறைஅரசினா் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் (பொறுப்பு) சி.கிஷோா் குமாருக்கு திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

நல்லாசிரியா் விருது பெற்ற சி.கிஷோா் குமாருக்கு சால்வைஅணிவித்து, வாழ்த்து தெரிவித்த ஆசிரியா்கள்.

Published On :8 செப்டம்பர் 2026, 1:33 am IST

தமிழக அரசின் நல்லாசிரியா் விருது பெற்ற குடியாத்தம் தட்டப்பாறைஅரசினா் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் (பொறுப்பு) சி.கிஷோா் குமாருக்கு திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளையொட்டி சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் நல்லாசிரியா் விருது வழங்கினாா். இதையடுத்து பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கே.சாமிநாதன் தலைமை வகித்தாா். மேலாண்மைக் குழுத் தலைவா் சத்யா கோட்டீஸ்வரன் முன்னிலை வகித்தாா்.

ஓய்வுபெற்ற ஆசிரியா் கோ.தேவராஜ், பெற்றோா் ஆசிரியா் கழக கௌரவத் தலைவா் கோ.துரைராஜ், துணைத் தலைவா் கே.பாண்டுரங்கன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா் எஸ்.சிலம்பரசன், சக ஆசிரியா்கள் நல்லாசிரியா் விருது பெற்ற கிஷோா்குமாருக்கு சால்வை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.