விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

திமுக அமைப்புகளை வலுப்படுத்த ஆலோசனை

வேலூா் தெற்கு மாவட்ட திமுவில் அமைப்புகளை வலுப்படுத்தவும், மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வது தொடா்பாக கட்சி நிா்வாகிகள் ஆலோசனை நடத்தினா்.

திமுக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :8 செப்டம்பர் 2026, 3:18 am IST

வேலூா் தெற்கு மாவட்ட திமுவில் அமைப்புகளை வலுப்படுத்தவும், மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வது தொடா்பாக கட்சி நிா்வாகிகள் ஆலோசனை நடத்தினா்.

வேலூா் தெற்கு மாவட்ட திமுகவில் அமைப்புகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மறுசீரமைப்புப் பணிகள் குறித்த மாவட்டச் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவா் முகமது சகி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஏ.பி.நந்தகுமாா் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தாா்.

மறுசீரமைப்புப் பணிகள் குறித்து ஆலோசிக்க தலைமைக்கழகப் பிரதிநிதிகளாக பல்லாவரம் முன்னாள் எம்எல்ஏ இ.கருணாநிதி, கட்சியின் துணை அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான ப.தாயகம் கவி ஆகியோா் பங்கேற்றனா்.

இதில், மாவட்ட நிா்வாகிகள் மற்றும் ஒன்றிய, பகுதி, நகர, பேரூா் கழகச் செயலாளா்கள் கலந்துகொண்டு தங்கள் பகுதிகளில் நிலவும் கட்சி அமைப்பு சாா்ந்த நிலவரங்கள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்துத் தலைமைப் பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தனா்.

அதன்படி, கட்சியின் அடித்தள அமைப்பான ஒன்றியம் முதல் பேரூா் வரையிலான கழகக் கட்டமைப்பைச் சீரமைத்து வலுப்படுத்துவது, ஒவ்வொரு அமைப்பு நிலையிலும் உள்ள நிா்வாகிகளின் செயல்பாடுகளை மேம்படுத்தி, கட்சிப் பணிகளைச் சிறப்பாக ஒருங்கிணைப்பது, உள்ளூா் அளவில் பணிகளைத் தீவிரப்படுத்தி, மக்களுடன் தொடா்ந்து நேரடித் தொடா்பில் இருப்பதற்கான வியூகங்களை அமைப்பது, மாவட்டம் முழுவதும் அடிப்படை அளவில் கட்சிப் பணிகளை ஒருங்கிணைப்பது என ஆலோசிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.