இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

அரசு அலுவலர் ஒன்றியம் மாவட்டக் குழு கூட்டம்

திருப்பூர், ஜன. 8: தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்டக்குழுக் கூட்டம் திருப்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது. பல்லடம் சாலை, சர்வேஸ்வரா அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் அ.சென்னிய

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

திருப்பூர், ஜன. 8: தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்டக்குழுக் கூட்டம் திருப்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

பல்லடம் சாலை, சர்வேஸ்வரா அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் அ.சென்னியப்பன் தலைமை தாங்கினார்.

 முன்னாள் தலைவர் சி.வேலாயுதம், முன்னாள் கல்வித்துறை அலுவலக ஒன்றிய துணைத்தலைவர் நாச்சிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

ஊராட்சி உதவியாளர்களுக்கு பதவி உயர்வு, பணிக்கொடை, ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை வழங்க அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும்.

குடிநீர் ஆபரேட்டர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேம்டும்.

சத்துணவு, ஊட்டச்சத்து, குழந்தைகள் நல அமைப்பாளர்களை அரசு ஊழியராக்குதல், தொகுப்பூதியம், மதிப்பூதிய பணியாளர்கள் அனைவரையும் காலமுறை ஊதியத்துக்கு கொண்டு வருதல், திருப்பூர் மாநகராட்சிப் பகுதியில் பணியாற்றும் அரசு அலுவலர்களுக்கு மற்ற மாநகராட்சிகளில் உள்ளதுபோல அனைத்து படிகளையும் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தணிக்கையாளர் எம்.கந்தசாமி, வட்டக் கிளைத்தலைவர்கள் ஜோதிநாத் (அவிநாசி) தண்டபாணி (தாராபுரம்), தர்மலிங்கம் (திருப்பூர்), ராஜேந்திரன் (பல்லடம்), பாலசுந்தரம் (காங்கயம்), ராமதாஸ் (உடுமலை) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.