கோவை, அக். 8: மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒவ்வொரு வார்டிலும் சிறப்பு குறைதீர் முகாம் நடத்தப்படும் என்று, திமுகவின் மேயர் வேட்பாளர் நா.கார்த்திக் உறுதியளித்துள்ளார்.
÷உக்கடம், பெருமாள் கோவில் வீதியில் பிரசாரத்தைத் துவக்கிய அவர், கெம்பட்டி காலனி, நாடார் வீதி, செட்டி வீதி, அசோக் நகர், சலீவன் வீதி, ராஜவீதி, கருப்பகவுண்டர் வீதி, பெரிய கடை வீதி, ம.ந.க. வீதி, குனியமுத்தூர் ஆகிய பகுதிகளில் வாக்குச் சேகரித்தார்.
அப்போது அவர் பேசியது:
÷மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு வார்டின் தேவைகளையும் தெரிந்துகொண்டு அதற்கேற்ப திட்டங்களைச் செயல்படுத்த, மாதம் ஒரு வார்டு என்ற அடிப்படையில் அனைத்து வார்டுகளிலும் சிறப்பு குறைதீர் முகாம் நடத்தப்படும்.
÷பில்லூர் 2-வது குடிநீர்த் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. அதன் பிறகு மாநகரில் குடிநீர்ப் பிரச்னை இருக்காது. அதேபோல, பாதாளச் சாக்கடைத் திட்டத்தையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
÷கோவையின் துணை மேயராக, கடந்த 5 ஆண்டுகளில் நான் மேற்கொண்ட பணிகளை எண்ணிப் பார்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும். மேயராகத் தேர்ந்தெடுக்கப் பட்டால், எந்த நேரத்திலும் மக்கள் என்னைத் தொடர்பு கொண்டு பிரச்னைகளைத் தெரிவிக்கலாம் என்றார்.
÷முன்னாள் எம்பி மு.ராமநாதன், திமுக மாநகரச் செயலர் வீரகோபால், வார்டு உறுப்பினர் பதவிக்கான திமுக வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் திராவிடமணி, கருப்புசாமி, எம்.எஸ்.ராமமூர்த்தி உள்ளிட்டோர் வாக்கு சேகரிப்பின்போது உடன் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை பாடலை தமிழ், தெலுங்கில் பாடிய ஸ்ரீ கௌரி ப்ரியா!

சாலை என்பது போராடக்கூடிய இடமல்ல: அமைச்சர் ராஜ்மோகன் | Minister Rajmohan |






