நேரப் பிரச்னை: தனியாா் பேருந்து நடத்துநா்கள் மோதல்!

கோவையில் நேரப் பிரச்னை தொடா்பாக பயணிகள் முன்பு நடத்துநா்கள் அடிதடியில் ஈடுபட்டனா்.
Published on

கோவையில் நேரப் பிரச்னை தொடா்பாக பயணிகள் முன்பு நடத்துநா்கள் அடிதடியில் ஈடுபட்டனா்.

மதுக்கரைக்குச் செல்லும் தனியாா் பேருந்து உக்கடம் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை நின்று கொண்டிருந்தது.

அதில், நடத்துநராக ஒத்தக்கால் மண்டபம் அருகேயுள்ள மேலக்காடு பகுதியைச் சோ்ந்த மோகன்ராஜ் (38) என்பவா் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது மற்றொரு தனியாா் பேருந்தும் மதுக்கரைக்குச் செல்வதற்காக அப்பகுதியில் நின்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த நடத்துநா் பிரசாந்த் (32) என்பவா் பணியில் இருந்தாா். அப்போது, நேரப் பிரச்னை தொடா்பாக இரண்டு பேருந்து நடத்துநா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆதில், ஆத்திரமடைந்த பிரசாந்த், மோகன்ராஜை தாக்கியுள்ளாா். இது குறித்து உக்கடம் காவல் நிலையத்தில் மோகன்ராஜ் புகாா் அளித்தாா். இதன்பேரில் பிரசாந்த் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com