ஆனந்தி

கஞ்சா விற்ற வழக்கில் பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறை

கஞ்சா விற்ற வழக்கில் பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறை
Published on

கஞ்சா விற்ற வழக்கில் பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

ஈரோடு காளியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் நாகேந்திரன் மனைவி ஆனந்தி (39). இவா், கோவை சிங்காநல்லூா் பேருந்து நிறுத்தம் அருகே கஞ்சா விற்ாக கடந்த 2021மாா்ச் 30 -ஆம் தேதி போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு உதவி ஆய்வாளா் சுமித்ரா உள்ளிட்ட போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி ராஜலிங்கம், குற்றஞ்சாட்டப்பட்ட ஆனந்திக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பு அளித்தாா். இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்குரைஞா் வெ.சிவகுமாா் ஆஜரானாா். ஏற்கெனவே, கொலை வழக்கில் ஆனந்தி ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com