இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

எல்.ஐ.சி. வீட்டுக் கடன் கண்காட்சி 4-ஆம் தேதி தொடக்கம்

எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் சார்பில் "உங்கள் இல்லம் 2017' எனும் வீட்டுக் கடன் கண்காட்சி கோவையில் 4-ஆம் தேதி தொடங்குகிறது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 12:20 am

DIN

எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் சார்பில் "உங்கள் இல்லம் 2017' எனும் வீட்டுக் கடன் கண்காட்சி கோவையில் 4-ஆம் தேதி தொடங்குகிறது.
வி.ஜி.விளம்பர நிறுவனம், ஷெர்னா பிராப்பர்டீஸ் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து 2 நாள் இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
பீளமேடு சுகுணா திருமண மண்டபத்தில் நடைபெறும் 6-ஆவது ஆண்டுக் கண்காட்சியை எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் தென் மண்டல மேலாளர் எம்.கே.கருப்பையா தொடக்கிவைக்கிறார்.  இந்தக் கண்காட்சியில் 50-க்கும் மேற்பட்ட முன்னணி கட்டுமான நிறுவனத்தினர், ரூ. 9 லட்சம் முதல் ரூ. 3 கோடி வரையிலான வீடுகள் விற்பனை குறித்தும், வீட்டுக் கடன்கள் குறித்தும் பார்வையாளர்களுக்கு விளக்கம் அளிக்கின்றனர்.
மேலும், இங்கு வீடு பதிவு செய்பவர்களுக்குத் தள்ளுபடி, தங்கக் காசு, வீட்டு உபயோகப் பொருள்கள் போன்ற சலுகைகள், இலவசங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.