அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

குறு மைய விளையாட்டுப் போட்டிகள்

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெறும் குறு மைய விளையாட்டுப் போட்டிகளை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சி.மகேந்திரன் தொடங்கி வைத்தார். 

News image
Updated On :16 நவம்பர் 2017, 10:27 pm

DIN

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெறும் குறு மைய விளையாட்டுப் போட்டிகளை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சி.மகேந்திரன் தொடங்கி வைத்தார். 
கோவையில் அடுத்த மாதம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொள்ளாச்சி குறு மைய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை  தொடங்கியது. இதில் 15 பள்ளிகளைச் சேர்ந்த 250 மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் தலைமை ஆசிரியர் இந்திரஜித், நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மகேந்திரன் எம்.பி. தலைமை வகித்து போட்டிகளைத் தொடங்கி வைத்தார். 
இந் நிகழ்ச்சியில் பங்கேற்ற  சி.மகேந்திரன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:   பொள்ளாச்சி-கோவை சாலை ரூ.500 கோடியில் நான்கு வழிச் சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. 
இந்த சாலையில், மலுமிச்சம்பட்டி, ஈச்சனாரி, கற்பகம் கல்லூரி எல்அன்டி பைபாஸ் ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்படும். 
கோவை-பொள்ளாச்சி சாலையில் 27 கி.மீ. தொலைவுக்குத்தான் பணிகள் நடைபெறுகிறது. ஆகவே சுங்கச் சாவடி அமைக்கக் கூடாது என, பிரதமர் மற்றும் மத்திய தரைவழி அமைச்சகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கோரிக்கையையும் மீறி சுங்கச் சாவடி அமைத்தால் பொதுமக்களுடன் இணைந்து நானும் போராட்டம் நடத்துவேன் என்றார்.
நிகழ்ச்சியில் அதிமுக பிரமுகர்கள் சக்திவேல், சுரபிரமேஷ், சிவராமன் வெள்ளியங்கிரி உள்பட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.