நலிந்தோர் வீடு கட்ட பணி ஆணை
முதல்வரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் கோவை வடக்குத் தொகுதியில் வசிக்கும் நலிந்தோர் வீடு கட்டிக் கொள்வதற்கான பணி ஆணை


முதல்வரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் கோவை வடக்குத் தொகுதியில் வசிக்கும் நலிந்தோர் வீடு கட்டிக் கொள்வதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி கவுண்டம்பாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கோவை கோட்ட குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கவுண்டம்பாளையத்தில் உள்ள கோவை வடக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அத்தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமை வகித்து 55 பயனாளிகளுக்கு பணி ஆணையை வழங்கினார். கோவை மாநகராட்சி வடக்கு மண்டல முன்னாள் தலைவர் நடராஜ், முன்னாள் கவுன்சிலர் வெண்தாமரை பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் ராதா, இளைஞர் பாசறை செயலாளர் கிருபாகரன், பகுதிச் செயலாளர் ஜி.கே.எஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...