முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சுதொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

போக்குவரத்து விதி மீறல்: புகைப்படம் எடுத்து ரூ.1.50 லட்சம் அபராதம் வசூல்

கோவையில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்ட வாகன உரிமையாளர்களிடம் இருந்து கடந்த 50 நாள்களில் ரூ.1.50 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Updated On :30 ஜனவரி 2024, 10:07 pm IST

கோவையில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்ட வாகன உரிமையாளர்களிடம் இருந்து கடந்த 50 நாள்களில் ரூ.1.50 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகர சாலைகளில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் பணியில் போக்குவரத்துக் காவல் துறையினர் அண்மைக் காலமாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வாகனங்களைப் புகைப்படம் எடுத்து, அந்த வாகன உரிமையாளர்களின் விவரங்களை போக்குவரத்துத் துறையிடம் இருந்து பெற்று, சம்பந்தப்பட்ட உரிமையாளரின் முகவரிக்கு அறிவிப்பு செய்து அபராதம் வசூலிக்கும் முறையை போலீஸார் கையாண்டு வருகின்றனர்.
கடந்த மாதம் முதல் இந்த புதிய நடைமுறை அமலில் இருக்கும் நிலையில், கடந்த சுமார் 50 நாள்களில் மட்டும் விதி மீறல்களில் ஈடுபட்ட சுமார் 300 வாகன உரிமையாளர்களிடம் இருந்து ரூ.1.50 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து உதவி ஆணையர் ராஜ்கண்ணா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.