
கோயிலில் கொள்ளையடிக்க முயன்றவர் கைது
கோவில்பாளையத்தை அடுத்த கள்ளிப்பாளையத்தில் கோயிலில் கொள்ளையடிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
கோவில்பாளையத்தை அடுத்த கள்ளிப்பாளையத்தில் கோயிலில் கொள்ளையடிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
கோவில்பாளையத்தை அடுத்த கள்ளிப்பாளையத்தில் சூரிய அப்புச்சி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த 11ஆம் தேதி இரவு மர்ம நபர்கள் இருவர் கொள்ளையடிக்க முயன்றதாகத் தெரிகிறது. இதையடுத்து கோயில் நிர்வாகி தனமூர்த்தி அளித்த புகாரின் பேரில் கோவில்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இதில், கள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (33), கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்தர் ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து கோவில்பாளையம் போலீஸார் கோபிநாத்தை புதன்கிழமை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பாலச்சந்தரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




