கோவையில் அதிமுகவினருடன் மோதலில் ஈடுபட்ட வழக்கில் அம்மா முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த 50 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், 6 பெண்களுக்கு ஜாமீன் வழங்கி வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கோவை வடவள்ளியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கோவை மாநகர தெற்கு மாவட்டச் செயலாளர் சேலஞ்சர் துரை, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ரோகிணி உள்ளிட்டோர் சென்ற கார்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக அதிமுக-அ.ம.மு.க.வினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட அ.ம.மு.க.வினர் 56 பேரை வடவள்ளி போலீஸார் கைது செய்தனர்.
அவர்கள் மீது சாலை மறியல், பொதுச் சொத்துகளை சேதப்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், அதிமுகவினர் கொடுத்த புகாரின் பேரில் சேலஞ்சர் துரை உள்ளிட்ட 5 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே, அதிமுக தரப்பில் காயமடைந்த வடவள்ளியைச் சேர்ந்த லிங்கனூர் மணி (57), தாமோதரன் (51), ஜெரால்டு (45), ரமேஷ்குமார் (35) ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் அளித்த புகாரின்பேரில் 56 பேர் மீதும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், ஜாமீனில் விடுவிக்கக் கோரி 56 பேரும் கோவை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் (எண் 6) தாக்கல் செய்த மனு மீதான விசாரணை திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, சாலை மறியல் தொடர்பான வழக்கில் 56 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
ஆனால் கொலை முயற்சி, பொதுச் சொத்துகளை சேதப்படுத்துதல் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை கோடை கால நீதிமன்ற நீதிபதி குணசேகரன் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, 50 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, 6 பெண்களுக்கு மட்டும்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரயில் பயணிகளுக்கு... தத்கல் டிக்கெட் முன்பதிவில் ‘டோக்கன்’ முறை! எப்போது தெரியுமா?

தாமாகவே வருகைப் பதிவு செய்யும் பள்ளி மாணவர்கள்! ஆசிரியைக்கு குவியும் பாராட்டு!

கனமழையால் ஆறாக மாறிய சாலைகள் - புகைப்படங்கள்

இன்றைய செய்திகள் ஜூலை 28 - நேரலை
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi


