உடல் உறுப்பு தானம் மூலமாகப் பிறரை வாழ வைப்பவர்கள் கடவுளின் தூதர்களாகத் திகழ்வதாக சுகிசிவம் தெரிவித்தார்.
கோவை, கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் இந்தியத் தொழில் கூட்டமைப்பு, யங் இந்தியன் மற்றும் பல்வேறு தனியார் மருத்துவமனைகள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உடல் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் "கொடுத்ததெல்லாம் கொடுத்தான்' எனும் தலைப்பில் சுகிசிவம் பேசியதாவது:
மனித குலத்தில் மனிதர்களுக்கு இருக்கும் எதிர்ப்பார்ப்புகள் எல்லையற்றவை. இம் மனிதர்களைத் திருப்தி கொள்ளச் செய்வது என்பது முடியாத காரியம். எனவே, தானம் மூலமாக குறிப்பாக உடல் உறுப்பு தானம் மூலமாகப் பிறரை வாழ வைப்பவர்கள் கடவுளின் தூதர்களாகத் திகழ்கின்றனர். ஒருவர் இறந்த பின்னர் அவரது உடல் உறுப்புகளை தானமாகக் கொடுப்பதால் எந்த இழப்பும் ஏற்படப்போவதில்லை. இது மனித குலத்தின் கடமை.
அதே நேரத்தில் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவது சமயத்துக்கு எதிரானது எனும் கூற்றை ஏற்க முடியாது. சிவபெருமானுக்கே கண்ணப்பனார் கண் தானம் வழங்கியதாக இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறைவனுக்காக கோயில் கட்டுவதைவிட உடல் உறுப்பு தானம் செய்வது பல புண்ணியங்களை நமக்கு கொடுக்கும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் உடல் உறுப்பு தானம் தொடர்பாகப் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்ட தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், நிர்வாகிகள் கௌரவிக்கப்பட்டனர்.
இதில், தமிழக அரசின் உடல் உறுப்புதான ஆணையத்தின் உறுப்பினர் செயலர் காந்திமதி, இந்தியத் தொழில் கூட்டமைப்பின் தலைவர் ரமேஷ், கூட்டமைப்பின் மருத்துவப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆர்.வி.ரமணி, யங் இந்தியன் அமைப்பின் தலைவர் திபேந்தர் சிங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரோட்டில் 10 கிலோ கஞ்சாவுடன் இருவா் கைது

கருத்துக் கணிப்புகளுக்கு மாறாக பாஜக கூட்டணி வெற்றி பெறும்: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

ஒருங்கிணைந்து ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி இந்தியா - இத்தாலி ஒப்புதல்

கல்லூரி மாணவரின் தந்தையிடம் ரூ.9.25 லட்சம் மோசடி செய்த இளைஞா் மீது வழக்குப் பதிவு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

