
போதையில் பள்ளி வாகனம் இயக்கியவர் கைது
சூலூர் அருகே குடிபோதையில் பள்ளி வாகனத்தை ஓட்டியவரை போலீஸார் கைது செய்தனர்.
சூலூர் அருகே குடிபோதையில் பள்ளி வாகனத்தை ஓட்டியவரை போலீஸார் கைது செய்தனர்.
சூலூரை அடுத்த நீலம்பூரில் தனியார் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளிப் பேருந்தின் ஓட்டுநராக நீலம்பூர் பகுதியைச் சேர்ந்த ரகுபதி(28) பணிபுரிகிறார். புதன்கிழமை பள்ளி முடிந்து குழந்தைகள் 39 பேரை பேருந்தில் அழைத்துச் சென்றுள்ளார். பேருந்து நீலம்பூரிலிருந்து மயிலம்பட்டி அருகே சென்றபோது முன்னால் சென்ற இரு சக்கர வாகனத்தில் மோதியது.
இரு சக்கர வாகன ஓட்டி பேருந்தை நிறுத்தி விசாரித்த போது, ஓட்டுநர் ரகுபதி குடிபோதையில் இருப்பது தெரியவந்தது. அப்போது அப்பகுதியில் கூடிய பொதுமக்கள் பேருந்தை சிறை பிடித்து சூலூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஜான் ஜினியன் சிங் ஓட்டுநரை கைது செய்து விசாரித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




