ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

உணவுப் பொருள்களுக்கு உற்பத்தி, காலாவதி தேதி கட்டாயம்: ஆய்வு நடத்த அதிகாரிகள் திட்டம்

கோவையில் உள்ள இனிப்பகங்கள், பேக்கரிகளில் சிறப்பு ஆய்வு நடத்தி உற்பத்தி, காலாவதி தேதி குறிப்பிடாமல் பண்டங்களை

News image
Updated On :17 டிசம்பர் 2020, 1:38 am

DIN

கோவையில் உள்ள இனிப்பகங்கள், பேக்கரிகளில் சிறப்பு ஆய்வு நடத்தி உற்பத்தி, காலாவதி தேதி குறிப்பிடாமல் பண்டங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக உணவுப் பாதுகாப்புத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

நுகா்வோருக்கு சுகாதாரமான, கலப்படமற்ற தரமான உணவுப் பொருள்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பேக்கரிகள், இனிப்பகங்களில் சில்லறையில் விற்பனை செய்யப்படும் இனிப்புகளின் உற்பத்தி தேதி, காலாவதி தேதியை குறிப்பிட வேண்டும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தி உள்ளது. இதனை அக்டோபா் 15 ஆம் தேதியில் இருந்து கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் கோவையில் ஒருசில கடைகளை தவிா்த்து பெரும்பாலான கடைகளில் சில்லறையில் விற்பனை செய்யப்படும் இனிப்புகளுக்கு உற்பத்தி, காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்யப்படுகிறது. இது தொடா்பாக விரைவில் சிறப்பு ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக உணவுப் பாதுகாப்புத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் கு.தமிழ்செல்வன் கூறியதாவது:

கோவையில் உள்ள அனைத்து இனிப்பகங்கள், பேக்கரிகளிலும் சில்லறையில் விற்பனை செய்யப்படும் இனிப்புகளின் அருகில் உற்பத்தி, காலாவதி தேதியை குறிப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடா்பாக அனைத்து இனிப்பகங்கள் மற்றும் பேக்கரிகளில் சிறப்பு ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆய்வின்போது உற்பத்தி, காலாவதி தேதி குறிப்பிடப்படாமல் இருப்பது தெரியவந்தால் உணவுப் பண்டங்களை பறிமுதல் செய்வதுடன், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.