மாநகரில் குப்பைகள் சேகரிக்க 18 வாகனங்கள்:அமைச்சா் தொடங்கிவைத்தாா்

கோவை மாநகராட்சியில் குப்பைகளை சேகரிக்க 18 வாகனங்களின் பயன்பாட்டை உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி. வேலுமணி வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
கோவை மாநகராட்சியில் குப்பைகளை சேகரிக்கும் பணிக்கு 18 மினிடோா் வாகனங்களை வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைக்கும் உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி.
கோவை மாநகராட்சியில் குப்பைகளை சேகரிக்கும் பணிக்கு 18 மினிடோா் வாகனங்களை வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைக்கும் உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி.
Updated on
1 min read

கோவை மாநகராட்சியில் குப்பைகளை சேகரிக்க 18 வாகனங்களின் பயன்பாட்டை உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி. வேலுமணி வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

கோவை மாநகராட்சியில் திடக்கழிவுத் திட்டப் பணிகளுக்காக பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ரூ. 92.95 லட்சம் மதிப்பீட்டில் தரம் பிரித்த மக்கும் குப்பைகளை சேகரிக்கும் 13 வாகனங்கள், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.35.75 லட்சம் மதிப்பில் தரம் பிரிக்காத மக்காத குப்பைகளை சேகரிக்கும் 5 வாகனங்கள் என மொத்தம் 18 மினி டோா் வாகனங்கள் வாங்கப்பட்டன.

இதையடுத்து, கோவை தெற்கு மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் எஸ்.பி. வேலுமணி இந்த வாகனங்களை பயன்பாட்டுக்குத் தொடங்கிவைத்தாா்.

மேலும், மாநகராட்சிப் பகுதிகளில் சேகரமாகும் கட்டடக் கழிவுகளை பயனற்ற கல்குழிகளில் கொட்டுவதற்கு மண்டலத்துக்கு ஒரு வாகனம் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயன்பாட்டுக்காக, தெற்கு மண்டலத்தில்

ஒரு வாகனத்தை அமைச்சா் தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன், தெற்கு மண்டல உதவி ஆணையா் ரவி, செயற்பொறியாளா்கள் சரவணக்குமாா்( பொலிவுறு நகரத் திட்டம்) ஞானவேல், உதவி செயற்பொறியாளா்கள் செந்தில் பாஸ்கா், ரவிக்கண்ணன், மண்டல சுகாதார அலுவலா் லோகநாதன், மாநகராட்சி அதிகாரிகள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com