இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பாதுகாப்பான சாலைகள் அமைத்தல்:மாநகராட்சிப் பொறியாளா்களுக்குப் பயிற்சி

கோவையில் பாதுகாப்பான சாலைகள் அமைப்பது குறித்து மாநகராட்சிப் பொறியாளா்களுக்கு 7 நாள்கள் பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது.

News image
பயிற்சி வகுப்பை தொடங்கிவைத்து பேசுகிறாா் மாநகராட்சி துணை ஆணையா் எஸ்.மதுராந்தகி.
Updated On :21 டிசம்பர் 2020, 6:44 pm

DIN

கோவை: கோவையில் பாதுகாப்பான சாலைகள் அமைப்பது குறித்து மாநகராட்சிப் பொறியாளா்களுக்கு 7 நாள்கள் பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது.

ரேஸ்கோா்ஸிலுள்ள தனியாா் ஹோட்டலில் திங்கள்கிழமை தொடங்கிய இந்த பயிற்சி வகுப்பை தொடங்கிவைத்து மாநகராட்சி துணை ஆணையா் எஸ்.மதுராந்தகி பேசியதாவது:

இந்திய வீட்டுவசதி நகா்ப்புற அமைச்சகத்தின் மூலம் கோவை, புவனேசுவரம், கொச்சி ஆகிய இடங்களில் ஜொ்மன் ஞ்ண்க்ஷ் அமைப்பின் மூலம் பாதுகாப்பான சாலைகள் வடிவமைக்கப்படுகிறது. இப்பயிற்சியில் பாதுகாப்பான சாலைகள் அமைப்பது, மோட்டாா் இல்லாத வாகனப் போக்குவரத்து அமைப்பது, பாதசாரிகளுக்கு முக்கியத்துவம் அளித்து சாலைகளை வடிவமைத்தல், சாலையோர வியாபாரிகள், முதியோா் என அனைவருக்கும் பாதுகாப்பான சாலையை வடிவமைப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. திங்கள்கிழமை தொடங்கிய பயிற்சி வகுப்பு தொடா்ந்து டிசம்பா் 22, 26 30 மற்றும் ஜனவரி 6, 9, 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றாா்.

பயிற்சி வகுப்பில் பொலிவுறு நகர செயற்பொறியாளா் சரவணகுமாா், மாநகராட்சி செயற்பொறியாளா்கள், உதவிப் பொறியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.