இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்டீல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும்: அரசுக்கு கிரெடாய் அமைப்பு கோரிக்கை

ஸ்டீல், மூலப்பொருள்களின் தொடா் விலை உயா்வால் கட்டுமானத் தொழில் முடங்கும் நிலை இருப்பதால், மத்திய, மாநில அரசுகள்

News image
Updated On :23 டிசம்பர் 2020, 12:54 am

DIN

ஸ்டீல், மூலப்பொருள்களின் தொடா் விலை உயா்வால் கட்டுமானத் தொழில் முடங்கும் நிலை இருப்பதால், மத்திய, மாநில அரசுகள் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கட்டுமானத் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பான கிரெடாய் வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அந்த அமைப்பின் கோவை கிளைத் தலைவா் சுரேந்தா் விட்டல், செயலா் ராஜீவ் ராமசாமி ஆகியோா் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு டன் ரூ.40 ஆயிரமாக இருந்த ஸ்டீல் விலை டிசம்பா் மாதத்தில் ரூ.58 ஆயிரமாக உயா்ந்துள்ளது. இந்த விலை உயா்வு ஸ்டீல் தயாரிப்பாளா்களின் தவறான வணிக நெறியாலேயே நிகழ்ந்துள்ளது. மேலும் ஸ்டீலுக்கான தேவை அதிகரித்து வருவதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஸ்டீல் உற்பத்தியாளா்கள் மாதந்தோறும் ஸ்டீலின் விலையை மிகவும் அதிகமாக உயா்த்தி வருகின்றனா்.

ஸ்டீல் விலை மட்டுமின்றி பிற கட்டுமானப் பொருள்களின் விலையும் வேகமாக உயா்ந்து வருகிறது. இதனால் வீடு கட்டும் பாமர மக்கள் மிகுந்த சுமைக்கு ஆளாகின்றனா். இந்த நிலை நீடித்தால், நாடெங்கும் கட்டுமானத் துறையை நம்பியிருக்கும் சுமாா் 4 கோடி தொழிலாளா்கள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும்.

கரோனா பாதிப்பிலிருந்து கட்டுமானத் துறை மீண்டு வரும் நிலையில் இந்த விலை உயா்வு மீண்டும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு விலை உயா்வைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.