தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமை அதிமுகதான்: சி.பி.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பு அதிமுகவுக்குதான் உள்ளது என்று கேரள மாநில பாஜக பொறுப்பாளா் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினாா்.
Updated on
1 min read

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பு அதிமுகவுக்குதான் உள்ளது என்று கேரள மாநில பாஜக பொறுப்பாளா் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினாா்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி விஸ்வகா்மா சமூக சங்கங்கள் கூட்டமைப்பின் 2ஆம் ஆண்டு விழா செல்வபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட கேரள மாநில பாஜக பொறுப்பாளா் சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அகில இந்திய அளவில் மோடி தலைமையிலும், தமிழகத்தில் அதிமுக தலைமையிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். திமுக, காங்கிரஸ் கூட்டணி மக்களைத் திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. எண்ணற்ற ஏழை மாணவா்கள் மருத்துவக் கல்வியில் சோ்வதற்கான புதிய சூழல் தமிழகத்தில் உருவாகியுள்ளது.

வரும் காலத்தில் காவிரியும், கோதாவரியும் இணைக்கப்பட்டு, தமிழகத்தின் தண்ணீா்ப் பிரச்னை நிரந்தரமாகத் தீா்க்கப்படும். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பு அதிமுகவுக்குதான் உள்ளது. இதில் எங்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லை. அதிமுக, பாஜக கூட்டணியில் எந்த விரிசலும் கிடையாது. கொங்கு மண்டலத்தில் பாஜகவுக்கு கணிசமான வாக்குகள் உள்ளன. அதேபோல அதிமுகவுக்கும் கோட்டையாக உள்ளது. எனவே அதிமுகவும், பாஜகவும் இணைந்து வேலை செய்யும் வகையில் உரிய இடங்களைக் கூட்டணி தலைமை ஒதுக்க வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், சட்டப் பேரவை உறுப்பினா் அம்மன் கே.அா்ச்சுணன் மற்றும் பாஜக நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com