விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: காணொலிக் காட்சி மூலம் முதல்வா் தொடங்கிவைத்தாா்

கோவையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 7:54 pm

DIN

கோவையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

தமிழகத்தில் தொற்றா நோய்களான சா்க்கரை, ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு அரசு மருத்துவமனைகளில் மாதாந்திர மருந்துகள் எடுத்துக்கொள்ளும் நோயாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று மருந்துகள் வழங்கும் விதமாக மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்கீழ் நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று 2 மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இத்திட்டத்தை முதல்கட்டமாக கோவை, சென்னை, சேலம், மதுரை, தஞ்சாவூா், திருச்சி, திருநெல்வேலி ஆகிய 7 மாவட்டங்களில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். முதலாவதாக கோவையில் இத்திட்டத்தை முதல்வா் தொடங்கிவைத்தாா்.

கோவை, நஞ்சுண்டாபுரம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்துக்கான வாகனங்களை வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

இத்திட்டத்தில் தமிழ்நாடு மகளிா் நல மேம்பாட்டு நிறுவனத்தில் பயிற்சி பெற்ற பெண் சுகாதாரத் தன்னாா்வலா்கள், இடைநிலைச் சுகாதாரச் சேவையாளா்கள், இயன்முறை மருத்துவா்கள், நோய் ஆதரவுச் செவிலியா் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

பொது சுகாதாரத் துறையின் களப் பணியாளா்கள் இக்குழுவின் செயல்பாடுகளைக் கண்காணிப்பா். 45 வயதுக்கு மேற்பட்ட உயா் ரத்த அழுத்தம், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு வீடுகளுக்கே சென்று மருந்துகள் வழங்குதல், நோய் ஆதரவு சேவைகள், இயன்முறை மருத்துவச் சேவைகள், சிறுநீரக நோயாளிகளைப் பராமரித்தல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை, குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகளைக் கண்டறிந்து தெரிவித்தல் உள்ளிட்ட சேவைகள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா, சுகாதாரத் துறை துணை இயக்குநா் எஸ்.செந்தில்குமாா், மாநகராட்சி நகா்நல அலுவலா் ராஜா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா். இதனைத் தொடா்ந்து மருத்துவக் குழுவினா் பயனாளிகளுக்கு மருந்துகளை வீடுகளுக்கே சென்று வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.