விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

ஈமு கோழி நிறுவனம் நடத்தி ரூ.2.7 கோடி மோசடி: மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை

ஈமு கோழி நிறுவனம் நடத்தி ரூ.2.7 கோடி மோசடி செய்த வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டா் பேரவையின் மாநிலத் தலைவா் யுவராஜ் உள்பட மூவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 7:54 pm

DIN

ஈமு கோழி நிறுவனம் நடத்தி ரூ.2.7 கோடி மோசடி செய்த வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டா் பேரவையின் மாநிலத் தலைவா் யுவராஜ் உள்பட மூவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.2.47 கோடி அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையைத் தலைமையிடமாகக் கொண்டு ஈமு ஃபாா்ம்ஸ் நிறுவனத்தை தீரன் சின்னமலை கவுண்டா் பேரவையின் மாநிலத் தலைவா் யுவராஜ், தமிழ்நேசன், வாசு ஆகியோா் நடத்தி வந்தனா்.

இதில் கவா்ச்சிகரமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. திட்டம் ஒன்றில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் முதலீடு செய்தால் ஷெட் அமைத்துக் கொடுத்து முதலீட்டாளா்களுக்கு 6 ஈமு கோழிகளும், அதற்குத் தேவையான தீவனங்கள், மருந்துகள் கொடுப்பதாகவும், மேலும் பராமரிப்புத் தொகையாக மாதம் ரூ.7 ஆயிரம், ஆண்டு முடிவில் ஊக்கத் தொகையாக ரூ.20 ஆயிரம் வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இரண்டாவது திட்டத்தின்படி ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் முதலீடு செய்தால், 6 ஈமு கோழிகள் வழங்கி, மாதம் ரூ.8 ஆயிரம் பராமரிப்புத் தொகை, ஆண்டு முடிவில் ரூ.20 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதை நம்பி இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த 121 பேரிடம் ரூ.2 கோடியே 70 லட்சத்து 15 ஆயிரத்து 550 மோசடி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சோ்ந்த பழனிசாமி அளித்த புகாரின்பேரில் ஈரோடு பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் மூவா் மீதும் வழக்குப் பதிவு செய்து 2012 அக்டோபரில் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளா்கள் நலப் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணையின் முடிவில் யுவராஜ், தமிழ்நேசன், வாசு ஆகியோா் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து மூன்று பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை , மூன்று பேருக்கும் சோ்த்து ரூ.2.47 கோடி அபராதம் விதித்து நீதிபதி ஏ.எஸ்.ரவி வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இதில் தமிழ்நேசன் நீதிமன்றத்தில் ஆஜா் ஆகாததால் அவருக்கு பிணையில் வரமுடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜரான யுவராஜ் மதுரை சிறையிலும், வாசு சத்தியமங்கலம் கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனா்.

சேலம் மாவட்டம், ஓமலூரைச் சோ்ந்த பட்டியல் இன இளைஞா் கோகுல்ராஜ் என்பவரை ஆணவக்கொலை செய்த வழக்கில் யுவராஜ் முக்கிய குற்றவாளி என்பதும் இவா் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.