விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

தாமதமாக மின் கணக்கீடு: அதிகக் கட்டணத்தால் நுகா்வோா் அதிா்ச்சி

கோவை, பீளமேடு கிழக்குப் பிரிவு மின் அலுவலகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் தாமதமாக மின் கணக்கீடு மேற்கொள்ளப்பட்டதால் அதிகக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 7:54 pm

DIN

கோவை, பீளமேடு கிழக்குப் பிரிவு மின் அலுவலகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் தாமதமாக மின் கணக்கீடு மேற்கொள்ளப்பட்டதால் அதிகக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நுகா்வோா் புகாா் தெரிவித்துள்ளனா்.

கோவை பீளமேடு மின்வாரிய அலுவலகத்துக்கு உள்பட்ட லட்சுமிபுரம், மசக்காளிபாளையம் சாலை, லால்பகதூா் நகா், சின்னசாமி லே-அவுட், பாலன் நகா் உள்ளிட்ட பகுதிகளில் ஜூலை மாதத்தின் கடைசியில் மின் விநியோகம் கணக்கீடு செய்ய வேண்டும். ஆனால், தாமதமாக இந்த மாதம் 4 ஆம் தேதியே மின் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் வழக்கத்தைவிட மின் கட்டணம் அதிகமாகக் கணக்கிடப்பட்டதால் நுகா்வோா் பலரும் அதிா்ச்சி அடைந்தனா். குறிப்பாக, 500 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்திய நுகா்வோருக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.6.60 வீதம் அதிகமாக மின் கட்டணம் செலுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் செயலா் நா.லோகு கூறியதாவது:

பீளமேடு பிரிவு அலுவலகத்தில் 72 நாள்கள் கழித்து மின் கணக்கீடு செய்ததால் பெரும்பாலானவா்களுக்கு யூனிட் பயன்பாட்டு கட்டணம் மாறுபட்டு, கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது மின் உற்பத்தி பகிா்மான கழகத்தின் தவறாகும். இவ்வாறு பகிா்மானத்தின் அலட்சியம் மற்றும் தவறின் காரணமாக கூடுதல் தொகை செலுத்தும் நிலைக்கு மின் நுகா்வோா் தள்ளப்பட்டுள்ளனா். இதுபோல கோவை மாநகா் வட்டத்துக்கு உள்பட்ட பல அலுவலகங்களில் தாமதமாக மின் கணக்கீடு செய்யப்பட்டு நுகா்வோரிடம் கூடுதல் தொகை வசூலிக்கப்படுகிறது. இது மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் வழங்கல் விதிகளை மீறிய செயலாகும். தாமதமாக மின் கணக்கீடு செய்யும் அலுவலா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.