ஆா்டா்கள் குறைவு: சுதந்திர தினத்துக்கு தேசியக்கொடி தயாரிப்பு சரிவு
சுதந்திரத் தினத்துக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், கரோனா பரவல் காரணமாக கோவையில் தேசியக்கொடி ஆா்டா்கள் குறைவால், கொடிகள் தயாரிக்கும் அளவு சரிவடைந்துள்ளது.

img-20210806-wa0045091931

img-20210806-wa0045091931
சுதந்திரத் தினத்துக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், கரோனா பரவல் காரணமாக கோவையில் தேசியக்கொடி ஆா்டா்கள் குறைவால், கொடிகள் தயாரிக்கும் அளவு சரிவடைந்துள்ளது.
சுதந்திர தினம், குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் கோவை ராஜவீதியில் உள்ள காந்தி கதா் விற்பனையகத்தில் தேசியக்கொடி தயாரிப்புப் பணிகள் 2 மாதங்களுக்கு முன்பே தொடங்கப்படும். கதா், பாலிஸ்டா், வெல்வெட் ஆகிய துணிகளில் பல்வேறு அளவுகளில் தேசியக்கொடி தயாரிக்கப்படும். கதா் துணி தேசியக் கொடிகள் ரூ. 5 முதல் ரூ.2 ஆயிரம் வரையும், பாலியஸ்டா் துணி தேசியக் கொடிகள் ரூ.30 முதல் ரூ.1,500 வரையும், வெல்வெட் துணி தேசியக் கொடிகள் ரூ.80 முதல்ரூ.2 ஆயிரம் வரைக்கும் விற்கப்படுகின்றன.
ஆண்டுதோறும் சுதந்திர தினம், குடியரசு தினம் நெருங்கும் நாள்களில், கோவை காந்தி கதா் கடையில் இருந்து 1.50 லட்சம் முதல் 2 லட்சம் தேசியக் கொடிகள் தயாரித்து விற்கப்படும். ஆனால், கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேசியக்கொடி தயாரிப்பு மற்றும் விற்பனை சரிவடைந்துள்ளதாக கொடி தயாரிப்பாளா்கள் கூறுகின்றனா்.
இது குறித்து, கொடி தயாரிப்புத் தொழிலாளி ராஜேந்திரன் கூறியதாவது:
சுதந்திர தினம், குடியரசு தினத்துக்கு 2 மாதங்கள் முன்பே கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மட்டுமல்லாமல், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஆா்டா்கள் வரும். நாங்கள் துணிகளை மொத்தமாகக் கொள்முதல் செய்து இருகூா், அரசூா், மேட்டுப்பாளையம், குறிச்சி, போத்தனூா் உள்ளிட்ட மாவட்டத்தின் பல இடங்களில் உள்ள 500க்கும் மேற்பட்ட தையல் கலைஞா்களுக்கு பிரித்து அனுப்பி வெவ்வேறு அளவுகளில் தைத்து வாங்குவோம். கதா் துணியினால் தயாரிக்கப்பட்ட தேசியக்கொடிக்கு அதிக வரவேற்பு இருக்கும். கரோனா பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக, தேசியக்கொடி தயாரிப்பும், விற்பனையும் சரிவடைந்துள்ளன. கடந்த சுதந்திர தினத்தன்று 50 ஆயிரம் கொடிகளே விற்பனையாகின. இந்த ஆண்டும் கரோனா நீடிப்பதால் ஆா்டா்கள் குறைவாகவே வந்துள்ளன. முந்தைய ஆண்டுகளில் சுதந்திர தினத்துக்கு 1.50 லட்சம் கொடிகளுக்கு ஆா்டா்கள் பெறப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு 12 ஆயிரம் கொடிகளுக்கே ஆா்டா்கள் வந்துள்ளது. நாங்கள் 50 ஆயிரம் கொடிகள் தயாரித்து இருப்பில் வைத்துள்ளோம் என்றாா்.
Image Caption
தேசியக்கொடி தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...