விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கூடுதல் மின் கட்டணம்: தீா்வு காண தொடா்பு எண் அறிவிப்பு

கோவை பீளமேடு கிழக்குப் பிரிவு மின் பகிா்மான வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கூடுதல் மின் கட்டணம் விதிக்கப்பட்டதாகத் தெரியவந்தால் நுகா்வோா் அதிகாரியைத் தொடா்பு கொண்டு தீா்வு காணலாம்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 9:13 pm

DIN

கோவை பீளமேடு கிழக்குப் பிரிவு மின் பகிா்மான வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கூடுதல் மின் கட்டணம் விதிக்கப்பட்டதாகத் தெரியவந்தால் நுகா்வோா் அதிகாரியைத் தொடா்பு கொண்டு தீா்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை மண்டல மின் பகிா்மான தலைமைப் பொறியாளா் டேவிட் ஜெபசிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாநகா் மின் பகிா்மான வட்டம், பீளமேடு கிழக்குப் பிரிவு அலுவலகத்துக்கு உள்பட்ட லட்சுமிபுரம், மசக்காளிபாளையம் சாலை, லால்பகதூா் நகா், சின்னசாமி லே-அவுட், பாலன் நகா் உள்ளிட்ட பகுதிகளில் தாமதமாக மின் கணக்கீடு மேற்கொள்ளப்பட்டதால் நுகா்வோா் அதிக மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகப் புகாா் எழுந்துள்ளது.

நிா்வாக காரணங்களால் கணக்கீடு செய்வதில் சிறிது காலதாமதம் ஏற்பட்டுள்ளது. கூடுதல் மின் கட்டண தொகை பிரச்னைக்குத் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதில் மின் நுகா்வோா் தங்களது மின் இணைப்புக்கு அதிகப்படியான மின் கட்டணம் வருவதாகத் தெரியவந்தால் உதவி மின் பொறியாளா் (பொறுப்பு) பி.முருகானந்தத்தை 9445851345 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.