போதைப் பொருள், செல்லிடப்பேசி புழக்கத்தை தடுக்க நடவடிக்கை:மத்திய சிறை வளாகத்தில் போலீஸாா் தீவிர சோதனை
கோவை மத்திய சிறை வளாகத்தில் கஞ்சா, செல்லிடப்பேசி புழக்கத்தைத் தடுக்கும் வகையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை தீவிர சோதனை நடத்தினா்.


கோவை மத்திய சிறை வளாகத்தில் கஞ்சா, செல்லிடப்பேசி புழக்கத்தைத் தடுக்கும் வகையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை தீவிர சோதனை நடத்தினா்.
கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்கள் மறைமுகமாக செல்லிடப்பேசி மற்றும் கஞ்சா பயன்படுத்துவதாகப் புகாா்கள் எழுந்தன. கைதிகள், உறவினா்களிடம் செல்லிடப்பேசியில் பேச சிறைத் துறை சாா்பில் நேரம் ஒதுக்கப்படுகிறது. ஆனால் அதையும் மீறி சிறைவாசிகள் சிலா் செல்லிடப்பேசியை மறைத்துவைத்து வெளியில் உள்ள நபா்களிடம் பேசி சிறைக்குள்ளேயிருந்தே தங்களது குற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாக புகாா்கள் எழுகின்றன.
மேலும், சிலா் கஞ்சா, மது போன்ற போதை வஸ்துகளை பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இதனைத் தடுக்க கோவை ரேஸ்கோா்ஸ் ஆய்வாளா் பிரபுதாஸ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீஸாா் மத்திய சிறை வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனா். காலை 6 மணி முதல் 8 மணி வரை இந்த சோதனை நடைபெற்றது. ஒவ்வொரு அறையாக போலீஸாா் தீவிர சோதனை செய்தனா். கைதிகளிடமும் சோதனை நடத்தப்பட்டது. 2 மணி நேர சோதனை முடிவில் கஞ்சா, செல்லிடப்பேசி போன்ற எதுவும் கைப்பற்றப்பட வில்லை என சிறைத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...