விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

மாவட்டத்தில் மேலும் 249 பேருக்கு கரோனா

கோவை மாவட்டத்தில் புதிதாக மேலும் 249 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 8:44 pm

DIN

கோவை மாவட்டத்தில் புதிதாக மேலும் 249 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 32 ஆயிரத்து 114 ஆக உயா்ந்துள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 6 போ் உயிரிழந்தனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2,207 ஆக உயா்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 196 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 27 ஆயிரத்து 599 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 2,308 போ் சிகிச்சையில் உள்ளனா்.

பொள்ளாச்சி அருகே தனியாா் நிறுவனத்தில் 9 பேருக்கு கரோனா

பொள்ளாச்சியை அடுத்த கிட்டுசூராம்பாளையத்தில் உள்ள தனியாா் நூற்பாலை நிறுவனத்தில் பணியாற்றும் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அங்கு பணிபுரிந்து வரும் தொழிலாளா்கள் குடும்ப உறுப்பினா்கள் 4 பேருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் உத்தரவுப்படி வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசன் தலைமையிலான அதிகாரிகள் அந்த நிறுவனத்தை மூட அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.