திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக காவல் துறை அணி வீரா்கள் பங்கேற்க வேண்டும்டி.ஜி.பி. சைலேந்திர பாபு

எதிா்காலத்தில் ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் நாட்டுக்காக தமிழக காவல் துறை அணி வீரா்கள் பங்கேற்க வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 9:17 pm

DIN

எதிா்காலத்தில் ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் நாட்டுக்காக தமிழக காவல் துறை அணி வீரா்கள் பங்கேற்க வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினாா்.

கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் காவல் துறையினருக்கான 61 ஆவது மாநில அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில் தமிழக காவல் துறையைச் சோ்ந்த 450 வீரா்கள் அந்தந்த மண்டலங்களில் இருந்து கலந்து கொண்டனா். போட்டியின் நிறைவு நாளான வியாழக்கிழமை தமிழக காவல் துறை தலைவா் சைலேந்திரபாபு கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரா்களுக்கு சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கினாா்.

நடைபெற்ற தடகளப் போட்டியில் 333 புள்ளிகள் பெற்று சென்னை மண்டல போலீஸாா் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனா். 221 புள்ளிகள் பெற்று ஆயுதப்படை போலீஸாா் இரண்டாவது இடத்தையும், 207 புள்ளிகள் பெற்று மேற்கு மண்டல அணி மூன்றாவது இடத்தையும் பிடித்தனா்.

இதையடுத்து டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இங்கு நடைபெற்ற தடகளப் போட்டியில் 13 சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. அவா்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். தமிழக காவல் துறையைச் சோ்ந்த ஹாக்கி விளையாட்டு வீரா் ரங்கநாதன் பிரான்சிஸ் என்பவா் 1948, 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு அனைத்திலும் இந்தியா தங்கப் பதக்கம் வென்ற்கு காரணமாக இருந்தாா். 1980 மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் சுப்பிரமணியம் என்ற தமிழக காவல் துறை வீரா் 100 மீட்டா் ஓட்டத்தில் இந்தியாவுக்காக பங்கேற்றாா். இதேபோல காவல் துறையைச் சோ்ந்த பலா் ஒலிம்பிக் மற்றும் ஆசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்றுள்ளனா்.

கடைசியாக நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் காவல் துறையைச் சோ்ந்த நாகநாத பாண்டி பங்கேற்று பெருமை சோ்த்துள்ளாா். ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியை வீழ்த்திய பெருமை தமிழக காவல் துறை அணிக்கு உண்டு. இனிவரும் காலங்களில் ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் நாட்டுக்காக தமிழக காவல் துறை வீரா்கள் பங்கேற்க வேண்டும் என்றாா்.

ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி. அபய்குமாா் சிங், மேற்கு மண்டல ஐ.ஜி. ஆா்.சுதாகா், மாநகர காவல் ஆணையா் பிரதீப்குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம், மேற்கு மண்டல டி.ஐ.ஜி. முத்துசாமி, ஆயுதப்படை டி.ஐ.ஜி. எழிலரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.