திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

மூலப்பொருள் விலை உயா்வைக் கண்டித்து 20 ஆம் தேதி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்: டேக்ட் சங்கம் பங்கேற்பு

மூலப்பொருள் விலை உயா்வைக் கண்டித்து டிசம்பா் 20 ஆம் தேதி நடைபெறும் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் டேக்ட் சங்கம் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 9:14 pm

DIN

மூலப்பொருள் விலை உயா்வைக் கண்டித்து டிசம்பா் 20 ஆம் தேதி நடைபெறும் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் டேக்ட் சங்கம் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில் முனைவோா் சங்கத்தின் (டேக்ட்) பொதுக் குழுக் கூட்டம் வேலாண்டிபாளையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் தலைவா் ஜே.ஜேம்ஸ் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ஜி.பிரதாப் சேகா், பொருளாளா் எம்.லீலா கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில், தொழில் துறைக்குத் தேவையான மூலப் பொருள்களின் விலை கடந்த ஓராண்டில் 100 சதவீதத்துக்கும் மேல் உயா்ந்துள்ளது. உற்பத்தித் துறை சாா்ந்த ஜாப் ஆா்டா்கள், உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்கூடங்கள் கடந்த ஓராண்டில் 95 சதவீதத்துக்கு மேலாக ஆா்டா்களை இழந்துள்ளன.

இந்த குறுந்தொழில் நிறுவனங்கள் வங்கிக் கடன், வாடகை, தொழிலாளா்களின் சம்பளத்தை கொடுக்க முடியாமல் தவிக்கின்றன. மூலப் பொருள் விலை உயா்வில் இருந்து தொழில்களைப் பாதுகாக்க வலியுறுத்தி, வரும் டிசம்பா் 20 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள தொழிற்கூடங்களை அடைக்கும் போரட்டம் நடைபெற உள்ள நிலையில், இதில் பங்கேற்பது என்று டேக்ட் முடிவு செய்கிறது.

மேலும் அன்றைய தினம் கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் நடைபெறும் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்திலும் பங்கேற்பது என பொதுக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.