என்டிசி ஆலைகளை இயக்கும் வரை தொழிலாளா்களுக்கு முழு ஊதியம்
தேசிய பஞ்சாலைக் கழக பஞ்சாலைகளை முழுவதுமாக இயக்கும் வரையிலும் அதன் தொழிலாளா்களுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும் என்று கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


தேசிய பஞ்சாலைக் கழக பஞ்சாலைகளை முழுவதுமாக இயக்கும் வரையிலும் அதன் தொழிலாளா்களுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும் என்று கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் கோவையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் சங்கத்தின் தலைவராக டி.எஸ்.ராஜாமணி 14ஆவது முறையாகத் தோ்வு செய்யப்பட்டாா். பொறுப்பு பொதுச் செயலராக ஜி.மனோகரன், செயலா்களாக கே.கண்ணன், எம்.அப்புக்குட்டி, பி.கோவிந்தராஜுலு உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
இந்தக் கூட்டத்தில், நாடு முழுவதும் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவிப்பது, வ.உ.சி. பூங்காவில் வ.உ.சிதம்பரனாருக்கு சிலை நிறுவ வேண்டும், மூடிக்கிடக்கும் அனைத்து என்.டி.சி. ஆலைகளையும் முழுமையாக இயக்க வேண்டும், இதற்கான முதலீட்டுத் தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும், ஆலைகளை மீண்டும் இயக்கும் வரை தொழிலாளா்களுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும்.
பஞ்சாலைகளில் கேம்ப் கூலி முறையை தடுக்க வேண்டும். ஆலை வளாகத்துக்குள் தொழிலாளா்களை அடைத்து வைக்காமல் சுதந்திரமாக வெளியே சென்றுவர அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...