சாலையோர வியாபாரிகள் சட்ட விதிகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும்
சட்டம், விதிகளை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று ஏஐடியூசி மாவட்டத் தெருவோர வியாபாரத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் (வாழ்வாதாரத்தை பாதுகாத்தல், முறைப்படுத்துதல்) சட்டம், விதிகளை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று ஏஐடியூசி மாவட்டத் தெருவோர வியாபாரத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக சங்கத்தின் செயலா் என்.செல்வராஜ், துணைத் தலைவா் ஜே.கலா ஆகியோா் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கரோனா தொற்று பரவல் காரணமாக வாழ்வாதாரம் இழந்துள்ள தெருவோர வியாபாரிகளின் நிலையைப் பரிசீலித்து, தளா்வுகள் அறிவிக்கப்படும் நிலையில் அவா்கள் ஏற்கெனவே வியாபாரம் செய்த இடங்களிலேயே முழுமையாக வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். 2014 ஆம் ஆண்டின் மத்திய சட்டத்தின் அடிப்படையில் 2015 ஆம் ஆண்டு தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் (வாழ்வாதாரத்தை பாதுகாத்தல், முறைப்படுத்துதல்) சட்டம், விதிகளை அனைத்து உள்ளாட்சிப் பகுதிகளிலும் முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பிட்ட கால நிா்ணயம் செய்து அனைத்து தெருவோர வியாபாரிகளுக்கும் வியாபாரச் சான்று, பயோமெட்ரிக் அடையாள அட்டையை வழங்க வேண்டும். நகா்ப்புற மேம்பாடு திட்டத்தின்படி தெருவோர வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் வழங்கும் திட்டம் இருந்தும் அது முறையாக அமல்படுத்தப்படவில்லை. பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப சாலையோர வியாபாரிகள் சட்ட விதிகள், துணை விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதை ரத்து செய்து முறையாக அறிவிப்பு செய்து கருத்துருக்களை கேட்டு துணை விதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...