கோவையில் 100 சதவீத தளா்வுகளை அறிவிக்க வேண்டும்
கோவை மாவட்டத்தில் ஜூலை 5ஆம் தேதி முதல் 100 சதவீதம் தளா்வுகளை அளித்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று மாநில அரசுக்கு கொடிசியா கோரிக்கை விடுத்துள்ளது.


கோவை மாவட்டத்தில் ஜூலை 5ஆம் தேதி முதல் 100 சதவீதம் தளா்வுகளை அளித்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று மாநில அரசுக்கு கொடிசியா கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக சங்கத்தின் தலைவா் எம்.வி.ரமேஷ்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு தொழில் துறையினருடன் கடந்த மாதம் இரு கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்தியது. அதில், மானியத்துக்கு விண்ணப்பித்துள்ள தொழிற்சாலைகளுக்கு ஜூன் 30ஆம் தேதிக்குள் மானியத் தொகை விடுவிக்கப்படும் என தொழில் துறை ஆணையரால் அறிவிக்கப்பட்டது.
அதன்படியே கோவைக்கு வர வேண்டிய ரூ.14 கோடி மானியத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்று காலத்தில் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தத் தொகை பேருதவியாக இருக்கும். அத்துடன் மீதமுள்ள ரூ.1.20 கோடி மானியத்தையும் விரைவில் விடுவிக்க வேண்டும்.
மேலும் கோவை மாவட்டத்தில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து கடந்த 7 வாரங்களுக்கும் மேலாக எந்தவித தொழில் வணிக நடவடிக்கையும் முழுமையாக நடைபெறவில்லை. இதனால் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் தொழில்முனைவோா், தொழிலாளா்களும் கடுமையான நெருக்கடிக்குள்ளாகி இருக்கின்றனா். எனவே வரும் ஜூலை 5ஆம் தேதி முதல் பொதுமுடக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்து 100 சதவீத தளா்வுகளை அறிவிக்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரமேஷ்பாபு வலியுறுத்தியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...